Home விளையாட்டுஇந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

by admin


இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான  முதலாவது ஒருநாள் போட்டி இன்று   தம்புல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30-க்கு  ஆரம்பமாகவுள்ளது

இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில்  போட்டியிடவுள்ளன. இந்த போட்டியானது இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

இந்த ஐந்து போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில் இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியினால் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும்.

உலக கிரிக்கட் அணிகளின் தர வரிசையில் முதல் எட்டு இடங்களை வகிக்கும் நாடுகள் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்கின்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையிலான தரப்படுத்தல் புள்ளிகளின் அடிப்படையில் இந்த தர வரிசை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இந்தியா – இலங்கை கடைசியாக விளையாடிய 18 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More