Home இலங்கைஅனுராதபுரத்தில் தாக்குதலுக்கு இலக்கான இந்து ஆலயத்திற்கு யாழ்.சிவசேனை விஜயம்.

அனுராதபுரத்தில் தாக்குதலுக்கு இலக்கான இந்து ஆலயத்திற்கு யாழ்.சிவசேனை விஜயம்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

அநுராதபுரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு யாழ்.சிவசேனை குழு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து உள்ளனர். அனுராதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது கடந்த 11ம் திகதி விஜயதசமி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயத்தினுள் அத்துமீறி நுழைந்த இளைஞர் குழு ஒன்று வழிப்பாட்டில் ஈடுபட்டு இருந்த பக்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், அம்மன் சிலை மற்றும் முருகன் சிலைகள் என்பன அடித்து உடைக்கப்பட்டு ஆலய கருவறைக்குள் பாதுகாப்பு தேடி ஓடிய இளைஞர் ஒருவரையும் கருவறைக்குள் சென்று வாளால் வெட்டி காயப்படுத்தி அட்டகாசம் புரிந்தனர்.

unnamed-5
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 7 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை யாழ்.சிவசேனை குழு தாக்குதலுக்கு இலக்கான ஆலயத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் , தாக்குதலுக்கு இலக்கான இளைஞரையும் சந்தித்துள்ளனர்.
அக் குழுவில் சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர் , வட்டுக்கோட்டையை சேர்ந்த மனித உரிமை அலுவலர் கலாநிதி மோகன் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், மற்றும் வவுனியாவை சேர்ந்த சட்டத்துறை  மாணவர் யசோதரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
இக்குழுவினர் அனுராதபுரத்தில் ஆளுநரின்செயலாளர்,  மேலதிக அரசாங்க அதிபர், அனுராதபுர நீராவிக் காவல் நிலையப் பொறுப்பதிகாாி, செயந்திபுர புத்த தவத்திரு மகாநாயக்க தேரர்,  அருள்மிகு கதிரேசன் கோயில் தவத்திரு பூசகர், மற்றும் அமைதிக் குழு செயசிங்க ஆகியோருடன் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடி இருந்தனர்.
unnamed-1
குறித்த கலந்துரையாடலின் பின்னர் யாழ்ப்பாண மருத்துவர் குழுவினால் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க என வழங்கப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது.
 
அத்துடன் தாக்குதல் சம்பவத்தின் போது உடைக்கப்பட்ட மூன்று அடி உயரமுள்ள கருங்கற் சிலைகளான  நாகபூசணி அம்மன் சிலை மற்றும் முருகன் சிலைகள் என்பவற்றினை மீளமைத்து கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என யாழ்.சிவசேனை குழு உறுதி வழங்கி உள்ளது.
unnamed-2 unnamed-3
unnamed-6 unnamed-7
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More