குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளமை இரகசியமானதல்ல என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். கட்சிக்குள் சில பிரச்சினைகள் காணப்படுவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையானவையே என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் கட்சியை பிளவடையச் செய்யவோ அல்லது பிளவடையக் கூடிய வகையில் செயற்படவோ ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார் எனவும், கட்சியை சரியான வழியில் இட்டுச் செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
1956ம் ஆண்டு முதல் கட்சிக்குள் பிரச்சினைகள் காணப்பட்டதாகவும் தற்போதும் அவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தற்போது தந்தை (மஹிந்த) பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்திக் கொண்டு சிரமத்திற்கு மத்தியில் அரசாங்கத்தை கொண்டு நடத்துகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வெளியிடும் கருத்துக்கள் ஏதேனும் காரணிகளின் அடிப்படையிலானவை என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.