162
மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில் நாக்பூர்-மும்பை துரந்தோ விரைவு புகையிரதம் இன்று காலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் புகையிரதத்தின 5 பெட்டிகள் மற்றும் ஒரு எஞ்சின் தடம் புரண்டதாதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 புகையிரதங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love