குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்த இருபது வருடங்களில் சனத் தொகை அதிகரித்திருக்கிறது போதும் பிரதேச சபைகள் நகர சபைகளாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் தேவைகளும், சேவைகளும் அதிகரித்துள்ளது.
இப்படி எல்லாம் அதிகரித்த நிலையில் காணப்பட ஊழியர்களின் ஆளணி மட்டும் பழைய நிலையிலேயே உள்ளதனால் ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்பதுடன் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் பல வெற்றிடங்களுக்கு அளணி நிரப்படவில்லை எனவும் இந்த நிலைமை நீண்ட காலமாக தொடர்கிறது எனவும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரின் கவனத்திற்கு மேற்படி விடயம் தொடர்பில் பல தடவைகள் கொண்டு சென்ற போதும் அவரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்னும் ஒரு வருடமும் ஒரு மாதமுமே இந்தக் காலத்திற்குள் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிகையில்லை எனவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் உள்ளுராட்சி திணைக்களத்தின் செயற்திறனற்ற நிலைமையுமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்கள்.
அத்தோடு தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஆளணி உருவாக்கம் செய்யப்பட்டு ஊழியர்கள் உள்வாங்கப்படுவாh்களாக இருந்தால் சுமார் மூவாயிரம் பேருக்கு வடக்கில் வேலைவாய்பபை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.