குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
முல்லைதீவு சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (31) இரவு ஒன்பது சாரதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், ஒன்பது உழவு இயந்திரங்களும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளன.
குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத் தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிகன்னவின் ஆலோசனையின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபனின் விசேட குழுவினர் குறித்த பகுதியை முற்றுகை இட்டதில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய சாரதிகள் பொலிஸ் குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒன்பது உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சாரதிகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நாளை புதுக்குடியிருப்பு பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதோடு, உழவு யந்திரங்களும் நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளன.