ஐரோப்பிய ஓன்றிய வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன் பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஓன்றிய தலைவர்களுடன் மூடிய கதவுகளிற்கு பின்னால் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளன.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி தெரேசா மே ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவேண்டும் என நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் பிரதமர் நாடாளுமன்ற தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுக்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் தயராகவுள்ளார் என டவுனிங்ஸ்ரீட் அறிவித்துள்ளதாக ஐரோப்பிய ஓன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமரின் இந்த முடிவினால் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் ஐரோப்பிய ஓன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.