20வது சீர்திருத்தம் திருத்தங்களுடன் வந்தால், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் தொடர்பில் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
20வது திருத்த சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை எனவும் அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம் எனவும் தெரிவித்த அவர் இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு தமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர் எனவும் அவர்கள் விளங்காத்தன்மையினால் தமது ஆதரவினை தெரிவித்திருக்ககூடும் எனவும் விக்னேஸ்வரலன் தெரிவித்துள்ளர்h.
20வது திருத்த சட்டம் குறித்த புதிய ஆவணம் திருத்தங்களுடன் வந்தால், கட்டாயம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.