இலங்கை

சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்ற வைத்தியர்களுக்கு பிரித்தானிய அங்கீகாரம் இல்லை :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சையிட்டம்  தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்ற வைத்தியர்கள் தொழில்புரிய பிரித்தானிய  மருத்துவ சபை    அனுமதி மறுத்துள்ளது.  பிரித்தானிய மருத்துவ சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின்  மேற்படி தகவல்கள்  வெளியிடப்பட்டுள்ளன.

பரித்தானியாவில்  மருத்துவர்களாக பணி புரிய விரும்புவோர் பிரித்தானிய  மருத்துவ சபையின்     அனுமதியை பெற வேண்டும் என்பதுடன்    அதற்காக முன்வைக்கப்படும் பி. எல். ஏ. பி (PLAB )பரீட்சையிலும் தோற்ற வேண்டும்   இந்நிலையில் குறித்த தகுதியை பெறும் பட்டியலில் 11 நாடுகளைச் சேர்ந்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பிரித்தானிய மருத்துவ சபை  அறிவித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply