Home இலங்கைமஹிந்த கால்வாசிப் பங்கு யுத்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தார் – சந்திரிக்கா

மஹிந்த கால்வாசிப் பங்கு யுத்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தார் – சந்திரிக்கா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கால் வாசிப்பங்கு யுத்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் யுத்தம் மூன்றில் இரண்டு பங்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் அரசாங்கம் ஒன்பது ஆண்டுகளாக குற்றம் இழைத்திருந்ததாகவும் அதனாலேயே ஆட்சி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் தலைமையில் மீளவும் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோல்வியைத் தழுவியிருக்க நேரிட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More