சிறைவிடுப்பில் வெளி வந்த நாளில் இருந்து இதுவரை 1,657 பேர் சந்தித்துள்ள பேரறிவாளனை வெளியாட்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து கடந்த மாதம் 24ம் திகதி ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.
தனது வீட்டில் தங்கி இருக்கும் பேரறிவாளனை, அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினர் 1,657 பேர் இதுவரை சந்தித்துள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிறைவிடுவிப்பு நீட்டிக்கப்பட்ட மனுவில் பேரறிவாளனை ரத்த சொந்தங்கள் தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. அத்துடன் ரத்த சொந்தங்கள் பேரறிவாளன் வீட்டில் தங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.