ஏர்செல்-மக்ஸ் வழக்கு தொடர்பாக, முன்னாள் இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஏர்செல்-மக்ஸ் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதில் பணமோசடி நடந்ததாக கூறி சி.பி.ஐ.யும், அமுலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. கார்த்தி சிதம்பரம் தனது தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சரihக இருந்தபோது, ஏர்செல்-மக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அன்னிய முதலீட்டை பெற்றபோது பண மோசடியில் ஈடுபட்டதாக அமுலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.
இந்த நிலையில், நிதிமுறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் உள்ள 1 கோடியே 16 லட்சம் ரூபா மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கி வைத்தது.
இந்நிலையில், வரும் ஒக்டோபர் 4ம் திகதி வழக்கு விசாரணைக்காக அவர் நேரில் முன்னிலையாக வேண்டும் என சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.