குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பில் ஆளும் கட்சியினர் ஒரு விதமான கருத்தை வெளியிட்டு வருவதாகவும் எதிர்க்கட்சியினர் அதனை விடவும் மாறுப்பட்ட வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கோ, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ எவ்வித பங்கமும் ஏற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதகம் ஏற்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.