குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் மூலமாக ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை நிராகரித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஓன்றிய பேரவையின் உச்சி மாநாடு நிலைமையை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பே என குறிப்பிட்டுள்ளார். உச்சிமாநாட்டிற்காக பிரசல்ஸ் சென்றுள்ள அவர் அங்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த உச்சிமாநாடு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பு மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கான கட்டுப்பாடுகளை இலகுவாக்குவதாக பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளே தனது முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள அவர் அவர்களின் உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஓன்றியத்துடன் உடன்பாட்டை எட்டும் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.