Home உலகம்இங்கிலாந்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தந்தையும் ஐந்து சிறுவர்களும் பலி

இங்கிலாந்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தந்தையும் ஐந்து சிறுவர்களும் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக தந்தையும் ஐந்து சிறுவர்களும் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மூன்று சிறுவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

இங்கிலாந்தின் லங்கமார்ச் வெல்ஸ்  ( Llangammarch Wells,)  பகுதியில் இன்று காலை  இந்த துயரம் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு முதல் 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் உயிர் தப்பியுள்ளனர் எனவும்   அதற்கும் குறைவான வயதுடையவர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

68 வயதான டேவிட் கத்பேர்ட்சன் ( David Cuthbertson     )  என்ற நபரும் அவரது குழந்தைகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். தீவிபத்தின் கடுமைகாரணமாக மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More