அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை விவகாரம் காரணமாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார். அவுஸ்திரேலியாவின் அரசியலமைப்பு சட்டப்படி, இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. இந்தநிலையில் தற்போது இந்த சட்டத்தை மீறி இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்ளிட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் தகுதிநீக்கம் செய்யப்பட்துடன் மேலும் 2 பேர் பதவி விலகியிருந்தனர்.
இந்நிலையில், இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் அலெக்சாண்டர் இன்று தன் பதவியை விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ஆளும் கூட்டணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள நிலையில் யாராவது ஒருவர் பதவி விலகினாலே ஆட்சிக்கு ஆபத்து என்கின்ற நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது