153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெற்கு அபிவிருத்தி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நபர்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி தெற்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இயங்கி வரும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love