174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜே.என்.பி.யின் பொதுச் செயலாளர் பிரியன்ஜித் விதாரண பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணிகளினால் இவ்வாறு பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்தில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொதுச் செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு சட்டத்தரணி கபில கமகே நியமிக்கப்பட உள்ளார். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love