கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி சென்னை பிரதான புகையிரத நிலையத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடாத்தியுள்ளனர்.
இந்திய தலைநகர் புதுடெல்லியிலிருந்து சென்னை பிரதான புகையிரத நிலையத்திற்கு வந்த விவசாயிகள் மனித எலும்புகள், ஏர்கலப்பை முதலியவற்றை அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தின்போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரதமர் மோடிக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.