அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டப்பகுதி மக்கள் உடனடியாக பிராந்திய ட்ரஸ்ட் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று இரவு நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுவருகின்ற நிலையில் மக்கள் தமது பிரதேசத்துக்கு உட்பட்ட பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனமான ட்ரஸ்ட் நிறுவன காரியாலயங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தமது சேத விபரங்களை அறிவிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளாரஇந்த தொடர்பினை ஏற்படுத்தி கொடுப்பதில். பொதுமக்களுக்கு மக்களுக்கு பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் உதவியாளர்கள் மற்றும் பிரஜா சக்தி உத்தியோகத்தர்களும் அமைச்சரின் பிரதேச இணைப்பாளர்களும் உதவுமாறும் அமைச்சர் திகாம்பரம் அவசர பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
மலையகத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உடனடி உதவி – அமைச்சர் திகாம்பரம் அறிவிப்பு
183
Spread the love