Home இலங்கைநொத்தாரிசு அனுமதிப்பத்திரத்துக்காக அரச அதிகாரிகள் இருவர் சத்தியப்பிரமாணம்

நொத்தாரிசு அனுமதிப்பத்திரத்துக்காக அரச அதிகாரிகள் இருவர் சத்தியப்பிரமாணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் இன்று காலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நொத்தாரிசு அனுமதிப் பத்திரத்துக்காக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிசிறப்புத் தரத்தை உடைய அதிகாரிகளான இருவரும் சட்டக்கல்வியை முடித்து உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் எடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சட்டத்தரணிகள் இலட்சுமணன் இளங்கோவன், சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கு நொத்தாரிசு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு பதிவாளர் நாயகத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதனடிப்படையிலே அவர்கள் இருவரும் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More