Home சினிமாவிஜய் சாரை நான் பிரதிபண்ணவில்லை

விஜய் சாரை நான் பிரதிபண்ணவில்லை

by admin


விஜய் சார் நல்ல விஷயங்களையே செய்வார். அவர் செய்கிறார் என்பதற்காக அந்த நல்ல விஷயங்ளை நான் செய்யாமல் இருப்பது சரி அல்ல என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் திகதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் தமிழக வினியோக உரிமை சுமார் 60 கோடி ரூபா வரை சென்றுள்ளது. இது அஜீத், விஜய் படங்களுக்கு நிகரான வியாபாரம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் சில விசயங்களில் சிவகார்த்திகேயன் விஜய்யை பிரதிபண்ணுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
சிறுவர்களை விஜய் தன் பக்கம் ஈர்த்ததனைப் பின்பற்றி சிவகார்த்திகேயன் தற்போது குட்டீஸ்களின் ஹீரோவாகிவிட்டார் என கூறப்படுகிறது.

அதேபோன்று வேலைக்காரன் பட வேலைகள் முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.இந்த விஷயத்திலும் அவர் விஜய்யை பிரதிபண்ணுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தான் விஜய்யை பிரதிபண்ணவில்லை எனவும் விஜய் சார் நல்ல விஷயங்களையே செய்வார். அவர் செய்கிறார் என்பதற்காக அந்த நல்ல விஷயங்ளை நான் செய்யாமல் இருப்பது சரி அல்ல எனவும் சிவகார்த்திகேயன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More