Home இந்தியா“TN 07 CM 2026”: நிஜமான திரைமறைவுத் திட்டம்  

“TN 07 CM 2026”: நிஜமான திரைமறைவுத் திட்டம்  

by admin

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது கன்னித் தேர்தலிலேயே 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளமை இந்திய அரசியலையே உற்றுநோக்க வைத்துள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது.  பல தசாப்தங்களாகக் கோலோச்சிய திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக முதலிடத்தைப் பிடித்துள்ளது. பலம் வாய்ந்த கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் தற்போதைய அமைச்சர்கள் தவெக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர். ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 இடங்களே தேவைப்படுவதால், கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.


திரைப்படமும் நிஜமும்: “GOAT” திரைப்படத்தின் தீர்க்கதரிசனம்!

விஜய்யின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது “The Greatest Of All Time” (GOAT) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தில் விஜய் ஓட்டும் காரின் பதிவு இலக்கம் “TN 07 CM 2026” என அமைந்திருந்தது. இது 2026-இல் அவர் முதலமைச்சராவார் என்பதைக் குறிக்கும் ஒரு நுட்பமான “Manifestation” (வெளிப்பாடு) என அவரது ஆதரவாளர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். 2024-இல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போதே, சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்திருந்தது தற்போது நிஜமாகியுள்ளது.

#TVK_Victory  #ThalapathyVijay  #தளபதி_விஜய் #TN07CM2026 #தமிழக_முதலமைச்சர்_2026 #TamilNaduPolitics  #GOATMovieHint #GOAT

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More