குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தமை தொடர்பில் கிடைக்க பெற்றன என யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லை இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்பு தாக்கல் செய்யபப்ட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை கட்சிகள் முன் வைத்தன.
அவை தொடர்பில் எமக்கு 75 ஆட்சேபனைகளை முன் வைத்தனர். அது தொடர்பில் மிக நுணுக்கமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்தோம். அந்த வகையில் 125 வேட்பு மனுக்களில் 05 வேட்பு மனுக்களை முற்றாக நிராகரித்து இருந்தோம். ஏனைய சில சபைகளில் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் சுயேட்சை குழுக்களாக போட்டியிடுவோருக்கு இன்றைய தினம் சின்னங்களும் வழங்கினோம் என தெரிவித்தார்.
அதேவேளை இன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு தெரிவத்தாட்சி அலுவலகர் தலைமையில் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற இருந்த கூட்டம் மாலை 5.30 மணியளவில் தான் ஆரம்பமானது. சுமார் நான்கு மணித்தியாலங்களாக கூட்டம் ஆரம்பமாகத நிலையில் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சை குழு பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.