Home இலங்கை“தேர்தலில் போட்டியிட்டால், ரயர் போட்டு எரிப்பொம்” புளொட்டின் பெண் வேட்பாளரை மிரட்டிய சிவமோகனின் உதவியாளர் கைது..

“தேர்தலில் போட்டியிட்டால், ரயர் போட்டு எரிப்பொம்” புளொட்டின் பெண் வேட்பாளரை மிரட்டிய சிவமோகனின் உதவியாளர் கைது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மிரட்டப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று (21.12.17) மிரட்டிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமது கட்சி சார்பில் மூன்று பிள்ளைகளின் தாயாராகிய பெண் வேட்பாளர் ஒருவரை, (ரெட்பான நிறுவனத்தில் இருந்து) கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற புளொட் அமைப்பு தெரிவு செய்திருந்தது.

இந்தப் பெண் வேட்புமனுவில் கையெழுத்திடுவதற்காக நேற்று (20.12.17) சிவமோகனின் புதுக்குடியிருப்பு அலுவலகத்திற்கு சென்றபோது அவரை வாசலில் வைத்து சிவமோகன் தரப்பினர் மிரட்டியதாக பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக “தேர்தலில் போட்டியிடக்கூடாது என்னும், மீறி போட்டியிட்டால் கொலை செய்து ரயர் போட்டு எரிக்கப்படுவாய்” அவர்கள் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளான மிரட்டப்பட்ட பெண், தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தலைமறைவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மிரட்டல் சம்பவம் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சம்பவ இடத்தில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உறுதிசெய்துள்ளனர்.  மிர்ட்டுதலுக்குள்ளான பெண் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து மிரட்டல்விடுத்த நபர் புதுக்குடியிருப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More