கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவதாகவும் இதனால் ராணுவவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மற்றிஸ ( Jim Mattis ) தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதற்காக நாட்டின் முக்கிய ராணுவப் படை தளங்களுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜிம் மற்றிஸ் இறுதி நாளான நேற்று போர்ட் பிராக் பகுதியில் உள்ள முக்கிய படைத்தளத்துக்கு சென்று அங்கு உரையாற்றும் போதே ,வ்வாறு தெரிவித்துள்ளார்.
போரை தவிர்க்க தூதரக ரீதியாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. எந்த நேரம் போர் மூண்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என அவர் தெரிவித்தார்.
தென்கொரியாவில் சுமார் 28 ஆயிரம் வீர்ரகளை அமெரிக்கா நிரந்தரமாக தயார் நிலையில் வைத்துள்ள போதும் வடகொரியாவுடன் போர் மூண்டால் மேலும் பல ஆயிரக்கணக்கான வீர்ரகளை அனுப்பி வைக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வடகொரியா மீது புதிதாக மேலும் ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு ஆணையகம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் வடகொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஜிம் மற்றிஸ் தெரிவித்துள்ளார்.