Home இலங்கை அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் – நுகர்வோரை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் – நுகர்வோரை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென நுகர்வோரை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரியுள்ளது. மத்திய வங்கியை மலினப்படுத்துவதற்கு அரசாங்கமே அனுசரணை வழங்கியுள்ளது எனவும், மத்திய வங்கிக்கு பிரதமரே ஆட்களை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் பதவியிலிருந்து விலக வேண்டுமென கோரியுள்ளது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் ஒரு தரப்பினர் ஈட்டியுள்ள நியாயமற்ற வருமானம் மீளவும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

மக்கள் வரி செலுத்துவது கள்வர்கள் பணம் திருடுவதற்காக கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் செல்வ செழிப்பில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More