202
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா பிஸ்ஸாவ் (guinea-bissau ) என்ற நாட்டில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து மிக வேகமாக சென்றதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love