உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ஹோப்மான் கிண்ண டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து சம்பியன் பட்டம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹோப்மான் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லலாந்து அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. மூன்றாவது தடவையாக சுவிட்சர்லாந்து இந்த டென்னிஸ் போட்டித் தொடரில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் (Roger Federer )  மற்றும் பெலின்டா பெனிகிக்  (Belinda Bencic) ஜோடி சுவிட்சர்லாந்து சார்பில் போட்டியிட்டது.


ஜெர்மனியின அலெக்ஸ்சாண்டர் ஷேரேவ் ( Alexander Zverev )மற்றும் அஞ்சலிக் கர்பர் ( Angelique Kerber )ஆகியோரை 4-3(3) 4-2 என்ற செற் கணக்கில் பெடரர் – பெலின்டா ஜோடி தோற்கடித்துள்ளது. ஹோம்பான் கிண்ண டென்னிஸ் போட்டி பேர்த் எரினாவில் நடைபெற்றது. இரண்டாவது தடவையாக பெடரர் ஹோப்மான் கிண்ணப் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.