குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹோப்மான் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரில் சுவிட்சர்லலாந்து அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. மூன்றாவது தடவையாக சுவிட்சர்லாந்து இந்த டென்னிஸ் போட்டித் தொடரில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் (Roger Federer ) மற்றும் பெலின்டா பெனிகிக் (Belinda Bencic) ஜோடி சுவிட்சர்லாந்து சார்பில் போட்டியிட்டது.
ஜெர்மனியின அலெக்ஸ்சாண்டர் ஷேரேவ் ( Alexander Zverev )மற்றும் அஞ்சலிக் கர்பர் ( Angelique Kerber )ஆகியோரை 4-3(3) 4-2 என்ற செற் கணக்கில் பெடரர் – பெலின்டா ஜோடி தோற்கடித்துள்ளது. ஹோம்பான் கிண்ண டென்னிஸ் போட்டி பேர்த் எரினாவில் நடைபெற்றது. இரண்டாவது தடவையாக பெடரர் ஹோப்மான் கிண்ணப் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது