Home சினிமா ஒரு கணக்காளராக இருந்து சிறந்த கலைஞனான விஜய் சேதுபதி!

ஒரு கணக்காளராக இருந்து சிறந்த கலைஞனான விஜய் சேதுபதி!

by admin

 

ஒரு கணக்காளராக பணியாற்றிய விஜய் சேதுபதி அந்தப் பணியில் விருப்பம் இல்லாமை காரணமாக அதனை விட்டு விலகி, தனக்குப் பிடித்த நடிப்புத்துறைக்கு வந்தார். சாதாரணமான ஒரு நடிகராக சினிமாவுக்குள் பிரவேசித்து அழுத்தமான பாத்திரங்களில் நடித்து சிறந்த கலைஞராக உருவெடுத்தார்.
தமிழ் சினிமாவில் பல புதிய நட்சத்திரங்கள் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் ஒரு சிலரே மிகவும் கனதி வாய்ந்த படங்களை தருகின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. இவர் 1978, ஜனவரி 16ஆம் திகதி தமிழகத்தின் இராஜபாளையத்தில் பிறந்தார்.
தனது படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.
 2010இல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார்.  கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.

இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னணி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை.

பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்திரனே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு ராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார். பின்பு, சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் வழங்கினார்.

2012ல்ல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டியனில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தர்மதுரையில் அசால்ட்டாக இவர் ஆடும் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது ஸ்டைலில் ஆடியிருப்பார். அத்துடன் நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, றெக்க, ஆண்டவன் கட்டளை, கவண், விக்ரம்வேதா, கருப்பன் முதலிய சமீபத்திய திரைப்படங்கள் வாயிலாகவும் கவனத்தை ஈர்த்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More