Home இலங்கைமண்டைதீவுக் கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கிடமான மரப் பெட்டி – ஆயுதங்கள் காணப்படலாம் என சந்தேகம்

மண்டைதீவுக் கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கிடமான மரப் பெட்டி – ஆயுதங்கள் காணப்படலாம் என சந்தேகம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியில் ஆயுதங்கள் காணப்படலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கடலில் மிதந்து வந்த இப் பெட்டி தொடர்பாக மீனவர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அப் பெட்டி தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More