குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பதுளை மாவட்டம் முழுவதிலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள வரைபடங்களின் அடிப்படையில் பதுளையில் அதிகளவு மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தின் 80 வீதமான பகுதிகள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதிகளில் 6000 குடும்பங்கள் தங்கியிருப்பதுடன், 1 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் நிமால் அபேசிறி தெரிவித்துள்ளார்.
இந்த அபாயங்களை கருத்திற் கொள்ளாது பணத்திற்காக கற்களை உடைப்பதிலும் மண்ணை அகழ்வதிலும் சிலர் தொடர்ந்தும் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.