144
வேகமான நடைப்பயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டம் போன்ற தொடர் பயிற்சிகளின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோய்களைத் தடுக்கலாம் என ஆய்வு ஒன்றின் மூலம் அறியப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பல்வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 14 லட்சம் மக்களிடம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக வேகமான நடைபயிற்சி மற்றும் விரைவான சைக்கிள் ஓட்டத்தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் ஈரல் புற்றுநோயை 27 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சிறுநீரகம், நுரையீரல், தலை, கழுத்து, மார்பகம், சிறுநீரகப்பை மற்றும் ஆசனவாய் சார்ந்த சிலவகை புற்றுநோய் தாக்கும் ஆபத்தையும் சுமார் 25 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும் எனவும் கண்டறிந்துள்ளனா். அதீதமான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அனைத்துவகையான புற்றுநோயில் இருந்தும் ஏழு சதவீதம் அளவிலான பாதுகாப்பை பெற முடியும் என அவா்கள் தொிவித்துள்ளனா்.
கடினமான தொடர் பயிற்சி மூலம் மட்டுமல்லாது, ஓய்வுநேரங்களில் செய்யும் சிலவகை உடற்பயிற்சியின் மூலமும் புற்றுநோயில் இருந்து சற்றே விலகி இருக்கலாம் என்பதும் சமீபத்தில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love