234
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பருத்தித்துறை கடற்கரை பகுதியில் மூங்கில் வீடொன்று கரை ஒதுங்கியுள்ளது. மூங்கில் தடிகளை பிணைந்து அதன் மேல் சிறிய வீடு ஒன்றினை அமைத்து அதனுள் பூஞ்செண்டுகள் வைக்கப்பட்டு நடுவில் ஒரு பாத்திரம் வைக்கப்பட்ட நிலையில் அது காணப்படுகின்றது.
தாய்லாந்து நாட்டு மீனவர்கள் இறந்த தமது உறவுகளுக்கு பிதிர்கடன் செய்யும் போது இவ்வாறு மூங்கில் வீடு அமைத்து கடலில் விடும் பழக்கம் கொண்டவர்கள் எனவும், அவ்வாறு கடலில் விடப்பட்ட மூங்கில் வீடே இவ்வாறு பருத்தித்துறை கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்,.
Spread the love