Home இலங்கைநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய சேதியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி கலாவதியிருந்தது.

கூட்டு அரசாங்கம் தொடர்பிலான உடன்படிக்கை கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் 30 அமைச்சர்களே அங்கம் வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More