178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் பிரிவில் கரோலின் வொசினிகாசி வெற்றியீட்டியுள்ளார். டென்மார்க்கைச் சேர்ந்த கரோலினின் முதல் கிரான்ட் ஸ்லாம் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்கத்கது. ரொமானியாவின் சிமொனா ஹெலேப்பை, கரோலின் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார்.
இறுதிப் போட்டியில் கரோலின் 7-6 3-6 6-4 என்ற செற் கணக்கில் சிமொனாவை வீழ்த்தியுள்ளார். 17 மாதங்களுக்கு முன்னர் உலக டென்னிஸ் தர வரிசையில் கரோலின் 74ம் இடத்தை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்றெடுக்க கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக கரோலின் தெரிவித்துள்ளார்.
Spread the love