201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் 350 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று(04) இலங்கையின் 70 வது சுதந்திரதின நாளில் கறுப்பு உடையணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள் எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை எனத் தெரிவித்து சுதந்திர தின நாளில் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love