172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு, தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட, இரு சகோதரர்களை நேற்று (06) இரவு கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து, 3 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகத்துக்கிடமாக பயணித்த படகை சோதனையிட்டபோது, குறித்த தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட இருவரையும் வடமாகாண சுங்க திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
Spread the love