Home இலங்கைஇணைப்பு 2 – ரவிகரன் விடுவிக்கப்பட்டுள்ளார்

இணைப்பு 2 – ரவிகரன் விடுவிக்கப்பட்டுள்ளார்

by admin

 

முல்லைத்தீவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட அவர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது :

Feb 28, 2018 @ 04:45

வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கபட்டிருந்தனர்.

இந்நிலையில், ரவிகரன் இன்று முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு நிலையத்துக்குச் சென்றிருந்தநிலையில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளதுடன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More