197
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தைப் பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love