கேரளாவில் இரண்டு வேறு வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் அளவிற்கு வனப்பகுதி எரிந்து அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரளாவில் உள்ள பருத்திப்பள்ளி என்ற இடத்தில் திடீரென்று தீ பிடித்து மரங்கள், செடி, கொடிகள் எரிந்துள்ளன. இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைத்த போதும் அதற்குள் 2 ஏக்கர் அளவிற்கு வனப்பகுதி அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று திருச்சூர் பகுதியில் உள்ள வாழைச்சல் வனப்பகுதியிலும் காட்டு தீ பரவி உள்ளது. இங்கு காற்றின் காரணமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருவதாகவும் இதுவரை 50 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் எரிந்து அழிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக மலையேற்ற பயிற்சிக்கு சென்ற பலர் உயிரிழந்த நிலையில் இந்தியா முழுவதும் வனப்பகுதிகளில் அனுமதியின்றி யாரும் காட்டுக்குள் நுழை தடைவிதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது