Home உலகம்குர்திஸ்தான் பிராந்தியத்திற்கான விமானப் பயணத்தடை நீக்கம் – ஈராக்..

குர்திஸ்தான் பிராந்தியத்திற்கான விமானப் பயணத்தடை நீக்கம் – ஈராக்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

குர்திஸ்தான் பிராந்தியத்திற்கான விமானப் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது. ஈராக்கிய பிரதமர் ஹாய்டர் அல் அபாடி இந்த விடயத்தை அறிவித்துள்ளார். குர்திஸ்தான் பிராந்தியத்திற்காக இவ்வாறு விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குர்திஸ்தான் பிராந்தியத்தில் தனிநாட்டு பிரகடனம் மேற்கொண்டதனைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச விமானப் பயணங்களுக்கு ஈராக்கிய பிரதமர் தடை விதித்திருந்தார். தற்போது இந்த தடையை நீக்குவதாக ஈராக்கிய பிரதமர் அறிவித்துள்ளார். குர்திஸ்தான் விமான நிலையங்களை ஈராக்கிய அரசாங்கமே நிர்வாகம் செய்ய குர்திஸ்தான் நிர்வாகம் இணங்கியதனைத் தொடர்ந்தே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More