Home இலங்கைவடக்கு தொடர்பில் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட விடயங்களை சர்வதேசம் பாராட்டவில்லை – கோதபாய

வடக்கு தொடர்பில் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட விடயங்களை சர்வதேசம் பாராட்டவில்லை – கோதபாய

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வடக்கு தொடர்பில் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட விடயங்களை சர்வதேசம் பாராட்டவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ வருத்தம் வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி, அங்கு மக்களுக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமே நடவடிக்கை எடுத்தது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் மஹிந்த அரசாங்கத்தினால் வடக்கிற்கு ஆற்றிய சேவைகளை சர்வதேசம் எப்போதும் பாராட்டியது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தேர்தல் நடத்துவதனால் மஹிந்த அரசாங்கத்திற்கு சாதக நிலைமை ஏற்படாது என எச்சரிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More