குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாகனங்கள் குத்தகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்கும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குத்தகை அடிப்படையில் வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.குத்தகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்;கப்படுவதற்கு எதிராக ஜனாதிபதி அனுப்பி வைத்த கடிதம் சமூக ஊடக வலையமைப்புக்களில் பிரசூரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு வாகனமொன்றுக்காக மாதாந்தம் ஏழு லட்சம் ரூபா உச்ச அளவில் வாடகையாக செலுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மாதமொன்றுக்கு 3000 கிலோ மீற்றர் என்ற அடிப்படையில் இந்த வாகனங்கள் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்பட உள்ளன. இவ்வாறு வழங்கப்படுவதனால் பாரியளவு செலவு ஏற்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.