284
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்று விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love