Home பிரதான செய்திகள்ப்ராக் ஓபன்  போட்டித் தொடரில் பெட்ரா கிவிடோவா வெற்றி…

ப்ராக் ஓபன்  போட்டித் தொடரில் பெட்ரா கிவிடோவா வெற்றி…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


ப்ராக் ஓபன் (Prague Open )  டென்னிஸ் போட்டித் தொடரில் பெட்ரா கிவிடோவா வெற்றியீட்டியுள்ளார். ரொமானியாவைச் சேர்ந்த மைஹேலா புஜர்னேசு ( Mihaela Buzarnescu  ) ஐ இறுதிப் போட்டியில் வீழ்த்தி பெட்ரா கிவிடோவா வெற்றியீட்டியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையில் பத்தாம்நிலை வகிக்கும் கிவிடோவா, ரோமானிய வீராங்கனையான மைஹேலா புஜர்னேசுவை    4-6 6-2 6-3 என்ற செற் கணக்கில் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார்.

கிவிடோவா இரண்டு தடவைகள் விம்பிள்டன் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதான கிவிடோவா கட்டார் ஓபன் மற்றும் சென் பீட்டர்ஸ்பேக் ஓபன் ஆகிய இரண்டு டென்னிஸ் போட்டித் தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More