176
யாழ்ப்பாணம் துன்னாலை கிழக்குப் பகுதியில் பாழடைந்த வீடொன்றின் வெற்றுக் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் எவரும் இல்லாத நிலையில் அந்தப் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற ஒருவர் கைக்குண்டு இருப்பதை அவதானித்து காவற்துறையினருக்கு தகவல் வழங்கினார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவற்துறையினர் கைக்குண்டை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love