Home இலங்கைபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் குற்றவாளி…

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் குற்றவாளி…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவி சந்தியா எக்னெலியகொடவுக்கு ஹோமாகம நீதிமன்றில் வைத்து மிரட்டியதாகக் கூறும் சம்பவம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் குற்றவாளி என நீதிமன்று தீர்பளித்துள்ளது. இந்த வழக்கு ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் உதேஸ் ரணதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். இதற்கமைவாக கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொள்ளவும், அடையாளப்படுத்தவும், எதிர்வரும் யூன் மாதம் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டதோடு, அன்றைய தினம் மற்றும் தண்டனை குறித்து தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More