மனித உரிமை ஆணைய விசாரணைக் குழு இன்று தூத்துக்குடி சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. விசாரணைகளை மேற்கொண்டு இக்குழு 15 நாட்களுக்குள் அறிக்கையை அளிக்க உள்ளது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே 22-ம் திகதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ;இதனால், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த மனித உரிமை ஆணையகம், இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கடந்த 23-ம் திகதி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு தமிழக அரசு இன்னும் பதில் அளிக்காதநிலையில் , தூத்துக்குடி சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையகம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தமிழகத்தின் சிரேஸ்ட வழக்கறிஞர் ராஜராஜன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவே டெல்லி யில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.